முக்கியச் செய்திகள் தமிழகம்

“2024-க்குள் ஓசூரில் லைட் மெட்ரோ ரயில் திட்டம்”

ஓசூரில் “லைட் மெட்ரோ ரயில்” திட்டம் திட்டம் 2024 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்தார்.

ஓசூரில் தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் சி. நரசிம்மன் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீடிப்பதற்காக பாஜகவின் சார்பில் அதற்கான அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்துப் பேசி 2024 ம் ஆண்டிற்குள் “லைட் மெட்ரோ” திட்டத்தை ஓசூர் வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறோம். அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மத்திய மாநில அரசாங்கங்கள் இணைந்து விரைவில் செயல்பட இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓசூரில் விமான நிலையம் இயக்கப்பட வேண்டும். சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று மாநில அரசு நினைக்கிறது. இருப்பினும், உடான் திட்டத்தின் வாயிலாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கின்ற இந்த விமான நிலையத் திட்டத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு புதிதாக ஒரு
முனையத்தை (டெரிமினலை) உருவாக்கி உடனடி நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மனு கொடுத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர இருக்கின்றோம்.

ஓசூர்- கிருஷ்ணகிரி -ஜோலார்பேட்டை வழியாக ஏற்கனவே அறிவித்த ரயில்வே திட்டம்
கிடப்பில் உள்ளது. அதை மீண்டும் எடுத்து 2024 ஆம் ஆண்டிற்கு முன்பாக அந்தப்
பணிகளையும் நடத்தி முடித்துக் கொடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் ஏற்கனவே சந்தித்து கோரிக்கை வைத்து இருக்கிறோம். அவரும் விரைவில் இந்த பணிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

ஓசூர் பகுதியில் வரும் முதலீட்டாளர்களுக்கு உதவுகின்ற வகையில் இந்தப்
பகுதியில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகவும் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கும் பாஜக சார்பாக ஒரு குழுவை அமைத்து செயல்பட இருக்கிறோம் என்று நரசிம்மன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

Gayathri Venkatesan

ஓடிடி தளங்களுக்கு கட்டுபாடு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!

Jayapriya

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்த திரைப்பிரபலங்கள்!

Halley Karthik