முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தன் பட இயக்குநரை “யோவ்..”என கத்திய சிவகார்த்திகேயன்!

டங்களின் promotionகளுக்காக போஸ்டர்கள் தொடங்கி, ட்ரெய்லர், டீஸர், First look, on board (படத்துக்கு நடிகர்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு) என பல்வேறு சாகசங்களை நிகழ்த்திவந்த தமிழ் சினிமா தற்போது புதிதாக கையில் எடுத்திருக்கும் உத்திதான் Announcement வீடியோ.

இதற்கு முன்பான Announcement வீடியோக்கள் எல்லாம் கொஞ்சம் formalஆக இருந்துவர டாக்டர் படத்திற்கான update வீடியோவை அப்படித்தின் இயக்குநர் நெல்சனும், நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு drama போல் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். எந்தவித அனிமேஷன்களும், கிராபிக்ஸ்களும் இல்லாமல் ஒரு ரூமில் ரகளையாக அவர்கள் எடுத்து வெளியிட்ட அந்த update வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து பாடல் வெளியீட்டு அறிவிப்பு பட வெளியீட்டு அறிவிப்பு என எல்லாவற்றிக்கும் அதேபோலான announcement வீடியோக்களை எடுத்து வெளியிட்ட promotionகள் அனைத்தும் பக்காவாக க்ளிக் ஆனது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத்தொடர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கான promotion-ம் அதே பாணியில் வெளியிடப்பட்டது. voice over-ல் மட்டும் தளபதி விஜய் கெஸ்ட் ரோல் செய்த அந்த வீடியோ இணையத்தின் சென்சேஷனாக மாறி புது ட்ரெண்டையே உருக்கியது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கான release Announcement வீடியோவும் அதே பாணியில் வெளியிடப்பட்டு ட்ரெண்ட் ஆகிவருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக ஒரு வீடியோ வந்தாலே யூ-டியூப் சேனகளின் thumbnail-ல் கலர் கலராக பல கதைகளை கட்டி ரகளை செய்வார்கள். டைரக்ட்ரை திட்டிய சிவகார்த்திகேயன், சத்தியராஜால் மன உளைச்சலுக்கு ஆளான டைரக்டர், அடுத்தடுத்த சர்ச்சையில் சிவகார்த்திகேயன், 100 கோடி வசூலை பார்த்தவுடன் ஆளே மாறிப்போன சிவகார்த்திகேயன், சீனியர் நடிகரின் முன்னால் சீன் போடும் சிவகார்த்திகேயன் , சத்தியராஜை திட்டி தீர்த்த சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயனிடம் பம்மிய சத்தியராஜ்  என விதவிதமாக thumbnail போட்டு பிளக்கும் அளவுக்கு எல்லா வகையான content-களையும் உள்ளடக்கி ஒரு announcement வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

இது ஒரு pan இந்தியா படமாக இல்லாமல் Pan உலகப்படமாக உருவாக்கி தெலுங்கு- தமிழ் மட்டுமல்லாது ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அண்டார்டிகா என எல்லா நாட்டிலும் வெளியிட ஆசைதான். ஆனால் ஆப்கானிஸ்தான்ல தியேட்டர் இல்ல சார் என இயக்குநர் அனுதீப் சொல்ல கஜகிஸ்தான்ல distributor இல்ல சார்ன்னு சிவகார்த்திகேயன் கவுண்டர் கொடுக்க, அண்டார்டிகால மனுஷங்களே லேது என சத்தியராஜ் முடித்துவைக்க என ரகளை செய்திருக்கிறார்கள் படக்குழு அந்த வீடியோவை நீங்கள் கீழே கண்டுகளிக்கலாம்.

இத்துடன் இந்த விளையாட்டு செய்தி முடிவடைந்தது. நன்றி வணக்கம்!

  • வேல் பிரசாந்த்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மூட்டு வலியா? இதை சாப்பிடுங்க… – சித்த மருத்துவர் அமுதா

Arivazhagan CM

நூலகங்களை இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

Gayathri Venkatesan

வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறோம் – முத்தரசன்

Jeba Arul Robinson