#Arani | விமரிசையாக நடைபெற்ற வரசித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் !

ஆரணி அருகே ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக…

ஆரணி அருகே ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விக்னேஸ்வர பூஜை, கணபதி லட்சுமி நவகிரக ஹோமம் செய்தனர் .

இதனை தொடர்ந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க மகா அபிஷேகம் நடத்தி மூலஸ்தான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி விநாயகரை வழிபட்டனர். தொடர்ந்து இன்று நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.