சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது- சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு வேதனை அளிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது…

சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு வேதனை அளிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். தொடர்ந்து அவர் தனது உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தார். இதனால் ஆளுநர் உரை முடிந்த பிறகு முதலமைச்சர் ஆளுநர் உரைக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியேறினார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, நாளை சட்டமன்றம் கூடியதும் மறைந்த திருமகன், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படும். தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடரானது வரு 13ம் தேதி முதலமைச்சர் பதிலுரையுடன் நிறைவடையும் என்று கூறினார்.

ஆளுநர் உரை குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் புதியதாக சில பகுதிகளை சேர்த்தும், வார்த்தைகளை நீக்கியும் ஆளுநர் பேசியுள்ளார். ஆளுநர் உரையாற்ற வந்தால் தேசிய கீதம் பாடப்படும் வரை இருந்து மரியாதை செலுத்துவது தான் மரபு. ஆளுநர் உரையாற்ற வழங்கப்படும் அரசியலமைப்புச் சட்ட உரிமையின் அடிப்படையில், உரையாற்றும் ஆளுநர், அம்பேத்கர் பெயரையே விட்டுவிட்டு பேசியது வேதனையாக உள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது அவரது முழு கடமை. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் எதற்காக இப்படி நடந்துகொள்கிறார்கள் என தெரியவில்லை. ஆளுநர் உரைக்கான வரைவு அறிக்கை கடந்த 5ம் தேதி ஆளுநர் மாளிகையில் அரசு ஒப்படைத்தது. ஆளுநரும் அதற்கு கடந்த 7ம் தேதி ஒப்புதல் கொடுத்தார். ஏதாவது மாற்ற வேண்டும் என்று கருயிருதியிருத்தால் அப்போதே மாற்ற சொல்லியிருக்காலம். ஆனால் பொதுமேடையில் பேசுவது மாதிரி சட்டப்பேரவையில் பேசுவது நாகரிகமல்ல என்று  கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி அரசால் கொடுக்கப்படும் உரையைத் தான் குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தில் வாசிக்கிறார். முற்போக்குச் சிந்தனை உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களில் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசை திருப்திப்படுத்தினால் உயர் பதவிகள் கிடைக்குமோ என ஆளுநர் இவ்வாறு செய்கிறாரா? என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றத்தை ஆளுநர் ரத்து செய்ய முடியுமா? தீர்மானத்தை எப்படி ரத்து செய்ய முடியும்? தேசிய கீதத்திற்கு மரியாதை செய்து ஆளுநர் எழும்பி சென்றிருக்கலாம். இது ஜனநாயக நாடு. உலகம் இருக்கும் வரை இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்படும் என்றார்.

மேலும், யார் கருத்து கூறினாலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கருத்து சொல்ல வேண்டும். அரசு 100% அமைதி காத்தது. யாரும் எதிர்வினையாற்றவில்லை. உரை முடிந்த பிறகே முதலமைச்சர் பேசியுள்ளார். ஆளுநர் இப்படியேத் தான் பேச வேண்டும் என நினைக்கிறீர்களா? தமிழ்நாட்டில் இருக்கும் பாதுகாப்பு உலகமே வியந்து பார்க்கும் வகையில் உள்ளது என்று பேசினார்.

சட்டமன்றத்தில் யாருக்கு எந்த இருக்கை கொடுக்க வேண்டும் என்பது எனது உரிமை. மரபு சார்ந்துதான் இருக்கை கொடுக்கப்படுகிறது. மதச்சார்புள்ள நாடுதான் என ஆளுநர் சொல்கிறார் என்றால், நீங்கள் அவரிடம் கேள்வி கேட்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக பேசுகிறீர்கள். நீங்க தொடர்ந்து செய்வது நியாயமா? என கேட்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.