கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மதுரை – செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, இன்று மதுரையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
முந்தைய ஆட்சியில் “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று கூச்சலிட்ட முதலமைச்சர் விஜய் தனது காவல்துறையால் தற்போது நிகழ்ந்துள்ள இந்தக் காவல் மரணம் குறித்து எப்போது வாய்த்திறக்கப் போகிறார்? பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் சாரியாவது சொல்வாரா?
இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




