முக்கியச் செய்திகள் தமிழகம்

“இந்து அறநிலையத்துறையின் பொற்காலம் சில மாதங்களில் உருவாகப்போகிறது” – முதலமைச்சர்

“அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப்போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருக்கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக எப்படி பணியாற்றுகிறார் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். சேகர்பாபுவை செயல் பாபு என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

அறிவித்த உடன் செயல்பாட்டுக்கு வந்திருப்பது இந்த திட்டம்தான். மீட்கப்படுவது கோயில் நிலங்கள் அல்ல ; கோயில் சொத்துக்கள். ஏராளமான கோயில்களில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. புதிய தேர்கள் வர உள்ளன. அறநிலையத்துறையின் சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் யாரும் செய்யாத வகையில் 120 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் சேகர்பாபு. சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை விரைவில் நிறைவேற்ற உள்ளோம். வெறும் அறிவிப்புகளுடன் நின்றுவிட மாட்டோம். அனைத்து அறிவிப்புகளையும் மாதந்தோறும் நானே கண்காணித்து செயல்படுத்த உள்ளேன். அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப்போகிறது.” என கூறியுள்ளார்.

இந்த இத்திட்டம் மூலம், 12,959 கோயில்களில் ஒருகால பூஜை நடத்தும் அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகளுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகளுக்கு திமுக சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் விநியோகிக்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி, ஹசன் மௌலானா, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement:
SHARE

Related posts

சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!

Nandhakumar

2020ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை எவை?

Jayapriya

புத்தகம் போதும்..பூங்கொத்து வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!