”மாற்றத்தை ஏற்படுத்துமா இந்த பொதுக்குழு…?” – ராமதாஸ் கொடுத்த நச் பதில்….!

பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை நடைபெற உள்ள பாமகவின் செயற்குழு மற்றும் பொது குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலத்திற்கு சென்றுள்ளார்.

பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில், சேலத்தில் வரும் 29-ம் தேதி   மாநில சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அன்புமணி தரப்பில், சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பாமகவின் பொதுக்குழு அல்ல என்றும் அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேலத்தில் நாளை நடைபெற உள்ள பாமகவின் செயற்குழு மற்றும் பொது குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்திற்கு சென்றார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,”பொதுக்குழுவை நாளை பாருங்கள் நாளை கேளுங்கள். நாளைக்கு சொல்ல வேண்டியதை இன்று சொன்னால் உப்பு சப்பு இல்லாமல் போகும். கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு எனக்கு அளிக்கும்” என்றார்.

இந்த பொதுக்குழு மாற்றத்தை உருவாக்குமா என்ற கேள்விக்கு ”எதிர்பாருங்கள்” எனத் தெரிவித்தார். மேலும் நேற்று வெளியிட்ட வீடியோ தொடர்பான கேள்விக்கு ”நாளை என் பேச்சை கேட்டு விட்டு மீண்டும் என்னை சந்தியுங்கள்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.