முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் விஜய்-க்கு முழு உருவச் சிலை வைத்த ரசிகர்கள்

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில், நடிகர் விஜய்யின் முழு உருவச்சிலை ரசிகர்களால் வைக்கப்பட்டது.

நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. பின்னர் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போன இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு , சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டது. விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும், மன்ற நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதற்காக பல்வேறு மாவட்டத்தில் இருந்து சுமார் 300 -க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விஜய் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். இதற்கிடையே, மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் முழு உருவ சிலை, ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் விஜய் கலந்துகொள்வரா இல்லையா என்பது தெரியவில்லை. நடிகர் விஜய்க்கு சிலை வைப்பது புதிதில்லை. ’மாஸ்டர்’ படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பெங்களூரில் விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

உலக சிறுதானிய ஆண்டாக 2023ஐ அறிவித்தது ஐ.நா!

Halley karthi

நீட் பாதிப்பு குறித்து 50,000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளதாக தகவல்!

Jeba Arul Robinson

டெல்லியில் கொரோனா தொற்று குறைகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

Hamsa