உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி!

உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றுள்ளார். உதகை அருகே, சாண்டிநல்லா தவிட்டுகோடு மந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், தோடர் முன்னேற்ற சங்கத்தில், துணை தலைவராக உள்ளார். இவரது மகள்,…

உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

உதகை அருகே, சாண்டிநல்லா தவிட்டுகோடு மந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், தோடர் முன்னேற்ற சங்கத்தில், துணை தலைவராக உள்ளார். இவரது மகள், நந்தினி, சென்னை சட்டக்கல்லூரியில், பி.ஏ.பி.எல்., சட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். தோடர் சமுதாயத்தில் இருந்து வழக்கறிஞராக தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

சட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் காண்பித்து நந்தினி வாழ்த்து பெற்றார். இதுகுறித்து பேசிய நந்தினி, தோடர் சமுதாயத்தில் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றது தமக்கு பெருமை அளிப்பதாக கூறினார். நீலகிரி மாவட்ட மக்களுக்கு வழக்கறிஞராக சேவை செய்வேன் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply