முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கலந்து கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்

இந்திய அணியும், வெஸ்ட் அணியும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள பொல்லாட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் கலந்து கொள்ளவிருக்கிறது. அதன் படி முதல் ஒரு நாள் போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அகமதாபாத்தில் மூன்று ஒரு நாள் போட்டிகளும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. டி20 போட்டிகள் பிப்.11, 16, 18 தேதிகளில் கொல்கத்தாவிலும் நடக்க உள்ளன. முதல் ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்குப் பகல்/இரவு ஆட்டமாக அகமதாபாத்தில் தொடங்குகிறது


இந்த ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா கேப்டனாக தலைமையேற்கவுள்ளார். ரோகித் சர்மா கேப்டனாக பொருப்பேற்கும் முதல் ஒரு நாள் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராத் கோஹ்லி விளையாடும் இந்தியாவில் கேப்டனாக இல்லாமல் விளையாடும் முதல் ஒரு நாள் போட்டியும் இதுதான். நிறைய புது முகங்கள் இன்றைய ஆட்டத்தில் கலந்து கொள்கின்றனர். வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இன்றைய ஒரு நாள் போட்டியானது இந்தியா ஆடும் 1000வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை இந்தியா விளையாடிய 999 போட்டிகளில் 518 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது. 431 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 9 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன. 41 ஆட்டங்கள் கைவிடப்பட்டன .

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆலோசகராக தோனியை எப்படி நியமிக்கலாம்? திடீர் எதிர்ப்பு

EZHILARASAN D

நீட் தேர்வு; இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Halley Karthik

தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த விவேக்கின் மகள்!

Halley Karthik