முக்கியச் செய்திகள் சினிமா

கேன்ஸ் படவிழாவில் வெளியாகுகிறது ‘வேட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது.

தமிழ் சினிமாவில், பேசவேண்டிய, காட்சிப்படுத்தவேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாறுகளை, நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் நோக்கோடு இயக்குநர் பா.இரஞ்சித் உருவாக்கிய நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோரும் இணைந்து தயாரிக்க இருப்பதகவும் கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது’

படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகை மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரியேறும்பெருமாள் படத்தில் தொடங்கிய, நீலம் புரொடக்சன்ஸ் இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை, என பல தனித்துவமான படங்களை கொடுத்துள்ள நிலையில், தற்போது வேட்டுவம் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது படமாக மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொடராகவும் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

டோக்கியோ பாராலிம்பிக்; துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

Saravana Kumar

கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை அப்படியே தர முடியாது: ஆர்.எஸ்.பாரதி

Halley Karthik

4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

Arivazhagan CM