முக்கியச் செய்திகள் குற்றம்

பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது

திருமணம் செய்ய மறுத்ததால், பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதுச்சேரி இளைஞரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூர் வடமங்கலம் அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான ஜெயக்குமார், அதே பகுதியில், காய்கறிகடை வைத்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெயக்குமாரும் அந்த பெண்ணும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதற்கிடையே ஜெயக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அந்த பெண் திருமணமாகி கணவர் இறந்து விட்ட நிலையில், ஜெயக்குமாருடன் பழகுவதையும் அவர் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். மேலும், வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த அவரை, செல்போனில் பேசி தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று அடிக்கடி ஜெயக்குமார் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் தனிமையில் ஒன்றாக இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘கையில் குழந்தை; காலால் விமான கேபினின் கதவை மூடிய பெண்’

ஆனால், ஜெயக்குமார் எதிர்பார்த்தப்படி மிரட்டலுக்கு அந்த பெண் பணியவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆபாச படத்தை அவரின் உறவினர்களுக்கு பகிர்ந்ததுடன், சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

Gayathri Venkatesan

டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Saravana Kumar