இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கை விவரங்களை, ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்துசமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராக குமரகுருபரன், கடந்த 15 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அவர், அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முடிவு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, தற்போது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஒவ்வொரு கோயிலின் வருமானம், செலவு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை, ஆண்டுதோறும் இணையதளத்தில் வெளியிட குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பிரிவு 86-ன் படி, அறங்காவலர்கள் குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதிக்குள் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஜூன் 30-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கையை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். நிதிநி நிதிநிலை அறிக்கையில் முறைகேடு நடப்பது கண்டறியப்பட்டால், அறங்காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,
மேலும் தவறுக்கு துணைபோகும் செயல் அலுவலர்கள் மீது தமிழ்நாடு சிவில் சர்வீஸ் சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.