முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிளஸ் டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தவே அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் பாதிப்பு ஏற்படாமல் எப்படி நடத்துவது என்பது குறித்து வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆசிரியர்கள் மீதான பாலியல் விவகாரத்தை அரசு கவனத்துடன் கையாண்டு வருதாகக் கூறிய அவர், ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

60 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட தயக்கம் – ஆய்வில் தகவல்

Saravana Kumar

7 பேரை குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்: அண்ணாமலை

Nandhakumar

ஐபிஎல்: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்? இன்று பலப்பரீட்சை

Halley karthi