நடிகை நயன்தாரா தயாரித்த படம்-சிறந்த படமாக தேர்வு செய்தது புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் “இந்திய திரைப்பட விழா 2022″ஐ பொதுப் பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார். 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு…

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் “இந்திய திரைப்பட விழா 2022″ஐ
பொதுப் பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார். 2021 ஆம்
ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு
சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம்
நடத்தும் “இந்திய திரைப்பட விழா – 2022” புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ்
கலையரங்கில் தொடங்கியது. பொதுப் பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் 2021ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, அப்படத்தின் இயக்குனர் P. S. வினோத்ராஜுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் காசோலையை பொதுப் பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கி கௌரவித்தார்.

இன்று தொடங்கிய இத்திரைப்பட விழா வரும் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாள்தோறும் மாலை 6 மணிக்கு பல்வேறு மொழிகளைச் சார்ந்த சிறந்த திரைப்படங்கள்
திரையிடப்பட உள்ளது. முதல் நாளான இன்று புதுச்சேரி அரசு சார்பில் சிறந்த
திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது.

இதனிடையே நியூஸ்7 தமிழுக்கு பேட்டி அளித்த கூழாங்கல் திரைப்படத்தின் இயக்குனர்
வினோத்ராஜ், “தான் நாடகத்தில் இருந்து வந்ததால், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் கிடைத்துள்ள இந்த விருதை அவருடைய ஆசிர்வாதமாக பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் திரைப்படங்கள் வியாபார நோக்கில் மட்டும் இல்லாமல் மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும்., சங்கரதாஸ்
சுவாமிகள் பெயரில் விருது கிடைத்துள்ளது கூடுதல் பொறுப்பும் மகிழ்ச்சியை
அளிக்கிறது. மேலும் இவ்விருதை தனக்கு வழங்கிய புதுச்சேரி அரசுக்கு
எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.