ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகள்

மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் வாழ்நாளில் முக்கியமான குறிப்புகள் நம்மை பிரமிக்க வைத்துள்ளது.   இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் சமீபகாலமாக உடல்…

மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் வாழ்நாளில் முக்கியமான குறிப்புகள் நம்மை பிரமிக்க வைத்துள்ளது.

 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் சமீபகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வந்த அவர் பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

 

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட அவரை, புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் ராணி எலிசபெத் பங்கேற்க இருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராணி எலிசபெத் மறைந்ததுமே அவரது 73 வயது மகன் சார்லஸ் மன்னர் ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார். ராணி எலிசபெத்தின் உடல் எடின்பர்கில் உள்ள அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், பின்னர் லண்டன் பக்கிங்காம் அரண்மனை கொண்டு செல்லப்பட்டு 10-வது நாளில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ராணி 2-ம் எலிசபெத் தொடர்பான சில தகவல்கள் நம்மை பிரமிக்க வைத்துள்ளது. அதில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்..

 

• ராணி 2-ம் எலிசபெத் தனது 25-ஆவது வயதில் ராணியாக மகுடம் சூடியுள்ளார்.

• இவரது வாழ்நாளில் 14 அதிபர்களை பார்த்துள்ளார்.

• ராணி 2-ம் எலிசபெத் 15 பிரதமர்களை பதவியில் அமரவைத்துள்ளார்.

• 9 அரியணைகள் இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

• ராணியின் 18-வது பிறந்த நாளின்போது, அவருக்கு கார்கி வகை நாய் பரிசளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 30-க்கும் மேற்பட்ட கார்கி வகை நாய்களை வாங்கி வளர்க்க தொடங்கினார்.

• எலிசபெத்திடம் 10 வகையான உயர்ந்த கிரீடங்கள் இருந்தன.

• ராணி எலிசபெத்துக்கு 30 பேரக்குழந்தைகள் உள்ளன.

• அவர் பதவிக்கு வந்த பிறகு 17 கப்பல்களை தொடங்கி வைத்துள்ளார்.

• ராணி எலிசபெத் பதவி காலத்தில் 6 ரோமன் கததோலிக்க போப் பதவிக்கு வந்துள்ளனர்.

• 2005ஆம் ஆண்டு தேம்ஸ் நதியில் இருந்த அண்ணப்பரவைகளில் 88 இவருக்கு சொந்தமானது என பக்கிங்ஹாம் தகவல் குறிப்பில் உள்ளது.

• ஆண்டுதோறும் 50,000-க்கும் மேற்பட்ட விருந்தாளிகளை பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத் சந்தித்து வந்துள்ளார்.

• 600-க்கும் மேற்பட்ட அறக்கட்டளை மற்றும் அமைப்புகளுக்கு அவர் உதவினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.