தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இளையராஜா’ திரைப்படம் சார்பில் இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு…

இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, ‘இளையராஜா’ திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம். 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல்…

இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, ‘இளையராஜா’ திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தைப் பெறுகின்றன.

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர். இசைமேதை என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சமீபத்தில் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இன்று இளையராஜாவின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’இளையராஜா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.