புலி வாலைப் பிடித்த விவசாயி உயிரிழப்பு!

மத்தியப்பிரதேசத்தில் வாலைப் பிடித்த போது புலி தாக்கியதில் காயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு, அருகிலுள்ள மகாராஷ்டிவின் வனப் பகுதியில் இருந்து புலி…

மத்தியப்பிரதேசத்தில் வாலைப் பிடித்த போது புலி தாக்கியதில் காயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு, அருகிலுள்ள மகாராஷ்டிவின் வனப் பகுதியில் இருந்து புலி ஒன்று வழி தவறி நுழைந்துவிட்டது. அந்த புலி, அங்கிருந்த கால்நடை ஒன்றை வேட்டையாடி உண்டபின், அருகில் உள்ள மரத்தடியில் நேற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்து.

ஊருக்குள் புலி நுழைந்த தகவல் அறிந்தவுடன், அங்கு திரண்ட மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்தவுடன், அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து அந்த புலியை பிடிக்க முயன்றனர். ஆனால், வனத்துறையினரிடம் சிக்காத புலி, சில மணி நேரம் ஆட்டம் காட்டி சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியது.

கிராம மக்கள் விரட்டிச் சென்ற போது, சந்தோஷ் (35) என்ற விவசாயி புலியின் வாலைப் பிடித்துள்ளார். அப்போது, திரும்பிய புலி சந்தோஷ் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது. ஆனால், கிராம மக்கள் சூழ்ந்து தாக்குதல் நடத்தியதால், அவரை விட்டுவிட்டு புலி தப்பிச் சென்றது.

புலி தாக்கியதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்ற போது, புலி வாலைப் பிடித்ததை சந்தோஷ் விவரிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி, சந்தோஷ் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.