ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது கட்சித் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது கட்சித் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன.

சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு 2023 கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சித் தொண்டர்களை சந்தித்து, கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரைக் காண வந்த ஏராளமான கட்சித் தொண்டர்கள், ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.