ஆப்பிரிக்காவில் கொடிய வகை பாம்பிடம் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றிய நாயின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டில் நாய், பூனை, கிளி, முயல், அணில் போன்ற செல்லப்பிராணிகளாக மனிதர்கள் வளர்ப்பார்கள். அதிலும் வீட்டின் காவலுக்காக நாயை அதிகம் பேர் தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். நாய்கள் வீட்டின் காவலுக்கு மட்டுமல்ல, அதன் உரிமையாளரையும் பாதுகாக்கும். உரிமையாளரை யாராவது தாக்கினால் அவர்கள் வளர்க்கும் நாய் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஆப்பிரிக்காவில் நாய் ஒன்று அதன் உரிமையாளரின் படுக்கையில் அடியில் மறைந்திருந்த கொடிய வகை பாம்பிடமிருந்து பாதுகாத்துள்ளது. குயின்ஸ்பர்க்கில் உள்ள எஸ்காம்பில் உள்ள ஒரு நபர், தனது செல்லப்பிராணியான நாய் (ரோட்வீலர்) படுக்கையிலிருந்து அவரைத் தள்ளிவிட்டுள்ளது.தொடர்ந்து படுக்கையின் பின்புறத்தை பார்த்து நாய் விடாமல் குரைத்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் எதோ இங்கு இருக்கிறது என்று உணர்ந்த அவர், படுக்கையை விலக்கி பார்த்தப்போது அதில் கொடிய வகை கருப்பு நிற மாம்பா பாம்பு ஒன்று மறைந்திருந்தது.
இதைப்பார்த்து அதிர்ந்த அந்த நபர் தனது நாயை அழைத்து கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து அவர், பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். உரிமையாளரை கொடிய வகை பாம்பிடம் இருந்து பாதுகாத்த நாயின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.