“அதிகாரத்தால் தி.மு.கவின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது!” – கனிமொழி

மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என, தவெக அரசின் அராஜகங்களை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அதோடு, முதலீடுகளை ஈர்க்கச் சென்ற வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நிலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கம்போல மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாலும், அடக்குமுறைகளாலும் தி.மு.கழகத்தின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எல்லாம் தி.மு.கழகம் ஒருபோதும் அடிபணியாது.” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.