பெரியாரின் 147-வது பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழ் வணக்கம்!

பெரியாரின் 147-வது பிற்ந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 147-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கத்தையும்,
சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, சுயமரியாதை- பகுத்தறிவு- சமத்துவம்- சமூகநீதி எனும் நான்கு தூண்களின் மீது புதிய எழுச்சிமிகு சமூகத்தைக் கட்டமைக்கப் போராடியவர் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

அவரது போராட்டம் ஒரு தனிமனிதருக்கு எதிரானதல்ல; ஆதிக்கத்திற்கு எதிரானது.
அவரது குரல் ஒரு காலத்திற்கானதல்ல; சமத்துவம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டிய குரல்.

“பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையைத் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.