இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியில் நடக்கின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக 11 சிக்ஸர்களை பறக்கவிட்ட அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்த நிலையில் 34 பந்துகளில் 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் பார்ட்னர்ஷிப் 59 பந்துகளில் 142 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து சஞ்சு சாம்சன் 35 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனைத்டொடர்ந்து வந்த திலக்வர்மா(2), ஷ்ரேயஸ் ஐயர்(29), சிவம்தூபே(14), இஷன் கிஷன்(10) ஆகியோர் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணிசார்பில் ஓமர்சாய் 2 விக்கெட்டுகளையும், ரஷித்கான் மற்றும் அமத்ஸாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 222 என்ற கடினமான இலக்கை துரத்தி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணியின் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவரில் 94 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்திக் வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பில் நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 3 விகெகெட்டுகளை வீழ்த்தினர். அக்ஸ்ர் படேல் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.




