“நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு” – உதயநிதி ஸ்யாலின் கண்டனம்

மதுரையில் மர்மமாண முறையில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கேட்டு போர்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டனத்திற்குறியது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மர்மமாண முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனுக்கு நீதி கேட்டு DYFI, SFI அமைப்பினர் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கணடனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்கு போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லி summon அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது.

மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் – வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது.

இந்த பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரணமடைந்த மாணவனின் குடும்பத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.