கல்லூரி வரை வன்முறையின் கோரத்தைப் படறவிட்ட திமுக அரசு – நயினார் நாகேந்திரன்……….!

திமுக அரசானது வன்முறையின் கோரத்தை கல்லூரி வரை படறவிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெலியிட்டுள்ளார். அதில்

”கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை சக மாணவன் கத்தியால் குத்தியதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பெண்பிள்ளை எந்தவொரு கயவனிடமும் சிக்கி விடக்கூடாது, ஆண்பிள்ளை எந்த போதை அரக்கன் பிடியிலும் சிக்கிவிடக்கூடாது என்ற பயத்தை மனதில் வைத்துக்கொண்டு, பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும் எனக் கல்வி நிலையங்களுக்கு அனுப்புகின்றனர் பெற்றோர்.

ஆனால், சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கினால் வன்முறையின் கோர நிழலைக் கல்வி நிலையங்கள் வரை கொண்டு நிறுத்தி கொடூரக் கொலைக் கூடாரங்களாக மாற்றி, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிதைத்து வருகிறது இந்தத் திமுக ஆட்சி.

கோபாலபுர வாரிசுகளைத் தூக்கிபிடிப்பதற்காக விளம்பர அரசியலில் மூழ்கி, தமிழக வாரிசுகளை வன்முறையின் வசப்படுத்தி, அவர்கள் வாழ்வை சின்னாபின்னமாக்கிய பாவமே திமுக அரசின் சிதைவுக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.