’பாமர மக்களின் உழைப்பால் தான் திமுக கொடி உயர உயரப் பறக்கிறது’ – திருச்சி சிவா எம்.பி

பாமர மக்களின் உழைப்பால் தான் திமுக கொடி உயர உயரப் பறக்கிறது எனத் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப்பாசறை, சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர்…

பாமர மக்களின் உழைப்பால் தான் திமுக கொடி உயர உயரப் பறக்கிறது எனத் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப்பாசறை, சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி மற்றும் அயலக அணி செயலாளர் எம்.எம் அப்துல்லா எம்.பி பங்கேற்றனர். அப்போது பேசிய திருச்சி சிவா எம்.பி, நாடாளுமன்றத்தில் நல்ல பலத்தோடும், நல்ல படை வீரர்களோடு இன்று திமுக உள்ளது என்றும், திமுகவை வழுப்படுத்த வேண்டிய கடமை இளைஞர் அணிக்கு உள்ளது எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் ‘விடியும் வரை காத்திரு’’

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் உள்ளவர்கள் வெறும் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல, போர்ப்படையின் சிப்பாய்கள் எனவும், நம் வரலாறு, நம் பயணம் நீண்டது. ஜன சங்கத்திற்குக் கூட அவ்வளவு வரலாறு இல்லை எனத் தெரிவித்தார். மேலும், நம்பிக்கைக்கு உதாரணம் இரண்டு நபர்கள் தான் ஒருவர் நபிகள் நாயகம் மற்றொருவர் தந்தை பெரியார் எனக் கூறிய அவர், பாசறை என்பது வீரர்கள் அடங்கிய கூடாரம்.

திமுக இன்று ஆளும் கட்சி. உங்களைப் போன்று பாசறையில் அமர்ந்து கேட்டவர்கள் இன்று சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். உழைப்பவர்களாக மாறினால் தான் நாம் பலமாக முடியும். பாமர மக்களின் உழைப்பால் தான் திமுக கொடி உயர உயரப் பறக்கிறது எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.