திமுக – பாஜக கூட்டணி முருகப்பெருமானின் கையில் தான் உள்ளது – நயினார் நாகேந்திரன் பேட்டி!

திமுக – பாஜக கூட்டணி முருகப்பெருமானின் கையில் தான் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நிகழ்வை காண வந்த தமிழக பாஜக மாநில தலைவர் நிர்வாகி ஒருவர் வீட்டின் மாடியில் நின்று தீபத்தூணை வழிபாடு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,”திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது குறித்த கேள்விக்கு

150 வருட போராட்டத்துக்கு பின் தீபம் ஏற்றப்பட்டது மிக்க மகிழ்ச்சி. முருகனுக்கு தீபம் ஏற்றாமல் வேறு எங்கு ஏற்ற முடியும். அன்னியப் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட கோவில்கள் மோடி ஆட்சியில் மீட்கப்பட்டு, பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் தர்மம் வென்றுள்ளது, இந்த உலகத்தில் முருகனுக்கு மிஞ்சிய கடவுளே கிடையாது. தமிழக வெற்றிக் கழக அரசு 100 க்கு 100 தவறு செய்து விட்டது,.முதல்வர் ஜோசப் விஜய் தவறு செய்து விட்டார்.

அங்கேயும் சில இந்துக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, இந்தியாவின் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு என்று சொன்னால் இந்தியாவிலேயே இருக்க லாயக்கு கிடையாது, தகுதியற்றவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும்.

தொகுதி மறுவரையரைக்கு திமுக ஆதரவு குறித்த கேள்விக்கு, எந்த காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுத்துள்ளார்கள். அது இந்த நாட்டிற்கு செய்யும் நல்ல செயல்? அது முருகப்பெருமானின் கையில் உள்ளது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.