“தொகுதி மறுவரையறை மசோதாவை தவெக ஆதரிக்க வேண்டும்” – அண்ணாமலை!

தொகுதி மறுவரையறை மசோதாவை தவெக ஆதரிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தொகுதி மறுவரையறை மசோதாவை தவெக ஆதரிக்க வேண்டும்; அதை அரசியல்படுத்தக் கூடாது. மக்களை பொறுத்தவரை அடுத்து நடக்கூடிய தேர்தல் இந்து முஸ்லிம் தேர்தலாக இருக்க கூடாது, அது வளர்ச்சிக்கான தேர்தலாக இருக்க வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் தீபத்தை ஏற்றிவிட்டு, தமிழகத்தில் அடிப்படை பிரச்சினையை அரசியல் கட்சிகள் பேச வேண்டும். எங்களைப் பொருத்தவரை நாகரிகமான அரசியலை we the leaders முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சரின் நேரம் செல்ல வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சிஆர்பிஎப் காவல்துறை வைத்து நடக்கக்கூடிய நிகழ்வு ஒரு தவறான முன்னுதரணமாக இருக்கப் போகிறது. நியாயப்படி இது நடந்திருக்க கூடாது. இது நடப்பதற்கு காரணம் தமிழக அரசுதான். தமிழக அரசு இதில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதேபோன்று தொடர்ந்தால் இவர்களுக்கு ஆட்சி செய்ய தெரியாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள். கடந்த ஆண்டு திமுக தப்பிவிட்டார்கள் என்று தான் நான் பார்க்கிறேன். திமுக உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறவில்லை. இன்றைக்கு திமுக இரட்டை நிலைப்பாடு எடுத்து இருக்கிறது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். எம்எல்ஏ அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்காதது முதல் தவறு, எம்.எல்.ஏ தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்காமல் இருப்பது இரண்டாவது தவறாக பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.