திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றம்!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது..

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று அதிகாலை முதல் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் மலையின் மேதுள்ள தீபத்தூணில் தீபம் இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் அடங்கிய குழுவின் முன்பு ஏற்றப்பட்டது. “முருகனுக்கு அரோகரா” என பக்தர்கள் கோஷமிட்டனர். தீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில் மேளதாளம் முழங்க உற்சாகக் கொண்டாட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைதொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர், சிஆர்பிஎப் ஐஜி, கோவில் பட்டர்கள் உள்பட 13 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்த வழிகாட்டுதல் குழுவினர் இன்று மாலை 5 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்றியதை கண்காணித்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வையொட்டி பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேவேளை, பாதுகாப்பு பணியில் கூடுதலாக 400 சிஆர்பிஎப் வீரர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்தனர். பெங்களூருவில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கும் கூடுதல் படையினர் விரைந்தன. திருப்பரங்குன்றம் மலை மற்றும் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் சிஆர்பிஎப் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.