தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வலுவான வடகிழக்குக் காற்று வீசி, வங்கக்கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




