திருப்பத்தூரில் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைதுறை சார்பாக 12000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளியில் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. இதன் ஒரு அங்கமாக 12000 மரக்கன்று நடும் பணி திருப்பத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருப்பத்துார் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நாட்றம்பள்ளி சர்வீஸ் சாலையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் கலந்து கொண்டு மரக்கன்று நடும் விழாவினை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து வாணியம்பாடி உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில் கலந்துகொண்டு திருப்பத்துார் மாவட்டத்திலிருந்து திருவண்ணாம மாவட்டம் வரை நெடுஞ்சாலையில் 12,000 மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார்.
-அனகா காளமேகன்






