கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த
ஸ்பா மற்றும் மசாஜ் சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர் என்ற
பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக, காவல்
துறைக்கு தகவல் வந்ததால் பல்வேறு இடங்களில் சோதனையை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில், ஓசூர் சர்வீஸ் சாலையில் உள்ள கட்டட வளாகத்தில், மூன்றாவது மாடியில் ரிலாகஸ் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடைபெற்று வந்தது.
மேலும், கடந்த 30ம் தேதி அங்கு நடைபெற்ற சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்ட
நிலையில், 7 பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, மாநகராட்சி
நிர்வாக சார்பில் கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ்க்கு
உரிய பதிலளிக்காததால் ஸ்பா சென்டருக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அட்கோ,
காவல் ஆய்வாளர் தங்கவேல் மற்றும் போலிசார் உடன் சீல் வைத்து நடவடிக்கை
மேற்கொண்டனர். மேலும், முறையான அனுமதி பெற வேண்டுமென தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—-கு. பாலமுருகன்