கிராமத்து பெண்களுடன், கேக் வெட்டி பெண்கள் தின விழாவை ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் கொண்டாடினார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு
ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் “மகளிர் தின உற்சவ விழா” என்ற தலைப்பில் இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் – ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. மேலும், அழிந்துவரும் பாரம்பரிய மரங்களின் விதைகளை நட்டு, 25,000 பாரம்பரிய மரங்களை நடவு செய்வோம் என, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
மேலும் , இந்நிகழ்வில் வயது முதிர்ந்த பெண் ஒருவருக்கும், இளம்வளர் பெண் ஒருவருக்கும்
பூங்கொத்து கொடுத்தும், கேக்குகள் வெட்டியும் மகளிர் தினத்தை மாவட்ட ஆட்சியர் கொண்டாடி மகிழந்தார்.
பின்னர் வண்ணாங்குண்டு ஊராட்சியில் மகளிர் குழுவினர், பலன் தரும் மரம் வடிவில் நின்று பெண்கள் தின விழாவை கொண்டாடினர்.
கு.பாலமுருகன்









