கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தொப்பூர் வனப்பகுதியில் நடப்பட்டுள்ள 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக
தொப்பூர் காப்புக்காட்டில் 38 ஹெக்டேர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு
கடந்த 2019-20ம் நிதியாண்டில் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் திட்டத்தின் மூலம் 19 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வனத்துறையின் சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இக் காட்டில் புங்கை,வேம்பு,நாவல்,இழுப்பை,வில்வம் போன்ற மரங்களும், கொங்கு, சந்தனம் உள்ளிட்ட அரிய வகை மரங்களும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களால் பறவைகள்,மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இரையாக கிடைப்பதால் அவை இரை தேடி ஊருக்குள் புகுவது தடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு பருவ மழை பொய்த்துள்ளதால் கோடை காலத்தில்
இங்கு நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் பட்டுபோவதை தடுக்க டிராக்டர் மூலம் தண்ணீர் தெளிக்க மாவட்ட வன அலுவலர் அப்பாலாநாயுடு உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து
தருமபுரி வனச் சரக அலுவலர் அருண் பிரசாத் தலைமையில் வன பணியாளர்கள் 10 பேர், இதர நபர்கள் 30 பேர் என தினமும் 40 பணியாளர்கள் டிராக்டர் மூலம் 50 லிட்டர் தண்ணீரை மரக்கன்றுகளுக்கு பாய்ச்சும் பணியில் ஈடுபடுத்தபட்டனர். கோடை காலம் முடியும் வரை தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகள் பராமரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
— வேந்தன்








