முக்கியச் செய்திகள் தமிழகம்

“கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை, ஆஸ்திரேலிய நாட்டின் தூதரக அதிகாரிகள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் கல்வி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும், அந்நாடு இதுவரை 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கல்லூரிகள் திறப்பது குறித்து அதிகாரிகள், முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

முன்னதாக செப்.12ல் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சட்டவிரோதமாக செயல்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம்: ஜெயராமன் குற்றச்சாட்டு

Halley Karthik

இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Web Editor

காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய முன்னாள் எம்.பி. – தமாகா கண்டனம்

Web Editor