மதுரை அவனியாபுரத்தில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சின்னா(19) என்பவர் மதுரை அவனியாபுரம் பசும்பொன் நகரில் அவரது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று இரவு அதே பகுதியில் சின்னா நின்று கொண்டிருந்த போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் சின்னாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சின்னாவை உயிருக்குப் போராடிய நிலையில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதேபோன்று இரண்டு தினங்கள் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்ற நபரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.தொடர்ந்து இதேபோன்று சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.







