முக்கியச் செய்திகள் இந்தியா

மணலை சாப்பிட்ட பசு – ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆந்திர மக்கள்; திருப்பதியில் வினோதம்!

திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசு ஒன்று சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

பசுக்கள் புல், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் காகிதங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றையும் உண்டு வருகின்றன. ஆனால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் பசு ஒன்று மணலை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.  இதனை பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அப்பகுதி மக்கள் ’கலியுகத்தில் இதுவும் சகஜம்’ என்று கருத்து தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பசு மணலை சாப்பிடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு நீண்ட காலமாக பசுக்களை வளர்த்து, பராமரிக்கும் நபர்களிடம் கேட்டபோது, வயது முதிர்ந்த பசுக்கள் மணலை எப்போதாவது ஒருமுறை சாப்பிடும் என்று தெரிவித்தனர். பசுவின் உடலில் தாது சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால், அதனை சரி செய்து கொள்வதற்காக பசுக்கள் மணலை சாப்பிடும் என்றும்,  பசுக்கள் தவிர ஒட்டகச்சிவிங்கி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், இவ்வாறு செய்வது வழக்கம் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : தகுதி நீக்கம் எதிரொலி : ‘Dis’Qualified MP’ என ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி

மணலை சாப்பிடுவதன் மூலம் பசுக்களுக்கு பாஸ்பரஸ் மற்றும் உப்பு ஆகிய சத்துக்கள் கிடைக்கிறது. மணலை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள தாது சத்து குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம் என்ற யோசனை பசுக்களுக்கு தெரிந்திருப்பது இயற்கையின் ஆற்றலே என்றால் மிகையல்ல.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram