முக்கியச் செய்திகள் இந்தியா

கவுண்டவுன் தொடங்கியது; காலை 9.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது SSLV – D1 ராக்கெட்!

PSLV ,GSLV ராக்கெட்டுகளைத் தொடர்ந்து இஸ்ரோ சார்பில் பாய உள்ளது SSLV – D1 ராக்கெட்டுக்கான கவுண்டவுன் இன்று காலை 2.26 மணிக்குத் தொடங்கியுள்ளது.

இஸ்ரோ பயணத்தில் மூன்றாவது ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ள SSLV ராக்கெட், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. SSLV – D1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட்டுக்கான, 6.52 மணி நேரத்திற்கான கவுண்டன் இன்று காலை 2.26 மணிக்குத் தொடங்கியுள்ளது. இஸ்ரோவின் PSLV , GSLV உள்ளிட்ட ராக்கெட்டுகளைத் தொடர்ந்து சிறிய விண் ஏவுதல் வாகனமாக உருவாக்கப்பட்ட SSLV ராக்கெட் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 9.18 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வளரும் நாடுகள், சிறிய செயற்கைக்கோள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கைக் கோள்களைப் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான சந்தையை வழங்கும் வகையில் SSLV ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. SSLV – D1 120 டன் எடை கொண்ட இந்த மிகச்சிறிய ராக்கெட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற ராக்கெட் போல இல்லாமல் 72 மணிநேரத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், SSLV ஆனது PSLV மற்றும் GSLV ஆகியவற்றுக்குப் பிறகு இஸ்ரோவின் மூன்றாவது ஏவுகணை வாகனம்.

அண்மைச் செய்தி: ‘நியூஸ் 7 தமிழ் சார்பில் மதுரையில் உணவுத் திருவிழா- முதல் நாளில் 30ஆயிரம் பேர் வருகை!’

SSLV செயற்கைக்கோள் புவியின் பல்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்த உதவியாகவும் ஒரு நேரத்தில் பல மைக்ரோசாட்லைட்களை ஏவுவதற்கு மிகவும் பொருத்தமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய SSLV ராக்கெட்டில் இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட AzaadiSAT என்ற செயற்கைக்கோள் கொண்டும், EOS 2 என்ற இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றையும் சேர்த்து விண்ணில் ஏவப்பட இருக்கிறது. ‘ஆசாதி சாட்’ எனப்படும் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் பங்கேற்றிருக்கின்றனர்.

இஸ்ரோ வரலாற்றில் PSLV , GSLV வரிசையில் மூன்றாவது ராக்கெட்டாக முதன்முதலாகக் காலை 9.18 மணியளவில் விண்ணில் ஏவ ஏவப்படும் செயற்கைக்கோள் 13.3 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியிலிருந்து சுமார் 356 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மினி, மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்களின் வரிசையில் ஏவுதல் சேவைகளுக்கான வளர்ந்து வரும் சந்தையில் முக்கிய பங்காற்ற இருக்கிறது SSLV ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்”- அமித்ஷா சூளுரை

Web Editor

குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம்: புதிய காப்பீடு அறிமுகம்!

EZHILARASAN D

ரஜினி கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா? கே.எஸ்.அழகிரி

Web Editor