நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா; மிஸ்பண்ணிடாதீங்க… இன்று கடைசி நாள்!

தமிழ்நாட்டின் பிரத்தியேக உணவுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா, மதுரை தமுக்கம் மைதானத்தில், நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு…

தமிழ்நாட்டின் பிரத்தியேக உணவுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா, மதுரை தமுக்கம் மைதானத்தில், நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக உள்ள உணவு வகைகள், இனிப்பு வகைகள் என 25க்கும் மேற்பட்ட பிரத்தியேகமான உணவுகளை, உணவுக்குப் பெயர் போன மதுரையில் சங்கமிக்க வைத்துள்ளது நியூஸ் 7 தமிழ்.

“ஊரும் உணவும் – இது உங்க ஊர் திருவிழா” என்ற பெயரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று உணவுத் திருவிழா நடைபெறுகிறது. கட்டணம் எதுவுமில்லாமல் இலவசமாக உணவுத் திருவிழாவில் பங்கேற்கலாம். பங்கேற்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்பவர்களுக்கு மணிக்கொரு முறை பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படுகிறது. உணவுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் சவால்களும் களைக்கட்டுகின்றன. திறமைகளை வெளிப்படுத்துபவர்களுக்குப் பரிசும் வழங்கப்படுகிறது. நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவடைகிறது. இன்று கடைசி நாள் என்பதால், மக்கள் வருகை இன்று அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/news7tamil/status/1555944911522119680

உணவுத் திருவிழாவில், தூத்துக்குடி மக்ரூன், கிருஷ்ணகிரி நைஸ் பால்கோவா, காரமடை தேர் மிட்டாய், சீர்காழி பருத்தி பால் அல்வா, தூத்துக்குடி கருப்பட்டி இனிப்புகள், காரைக்கால் அல்வா மற்றும் ஜாமூன், தஞ்சாவூர் அசோகா அல்வா, திண்டிவணம் முட்டை மிட்டாய், சேலம் மற்றும் கரூர் தட்டு வடக்கடை, அலங்காநல்லூர் பால் பன், திருச்சி அக்கார வடிசல், சேலம் மூலிகை தந்தூரி டீ, ஊத்துக்குளி வெண்ணெய், ஹனி பீடா, அம்பாசமுத்திரம் அரிசி அப்பளம், ஊட்டி வறுக்கி, மார்த்தாண்டம் தேன், உடுமலை பருப்பு சாதம், ஹோகேனக்கல் மீன் சாப்பாடு, ஆம்பூர் பிரியாணி, பள்ளிபாளையம் சிக்கன், கருப்பு கவுனி ஐஸ்கிரீம், மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் சந்திரகலா, 25 வகை சர்பத், நெல்லை இடியாப்பம் சொதி, திருப்பத்தூர் மக்கன்பேடா, திண்டுக்கல் வாழை இலை பரோட்டா, கீழக்கரை துதல் தொல் அல்வா, ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ், திண்டுக்கல் சீரகசம்பா பிரியாணி, மதுரை முயல் கறி, பள்ளிபாளையம் சிக்கன், நாமக்கல் முட்டை, ஊத்துக்குளி வெண்ணெய், பன்ருட்டி முந்திரி, பாண்டிச்சேரி கமரக்கட்டு, சேலம் ஜவ்வரிசி இனிப்புகள், நாகை பனங்கிழங்கு கேக், கரூர் கரம்ஸ், மாஞ்சோலை டீ உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெறவுள்ளன.

அண்மைச் செய்தி: ‘கவுண்டன் தொடங்கியது; காலை 9.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது SSLV – D1 ராக்கெட்!’

https://twitter.com/news7tamil/status/1555944246427131904

முதல் நாளான நேற்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என 6 முறை பரிசு குலுக்கல் போட்டி நடத்தப்படுகிறது. வெட் கிரைண்டர், வெள்ளி நாணயங்கள், கிப்ட் ஹாம்பர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களும் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். உணவுத் திருவிழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக இளவட்டக்கல் தூக்குதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.