மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் முதல் நாளில் 30 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து கண்டு ரசித்தனர்.
உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர். நியூஸ் 7 தமிழ் சார்பில் இன்றும், நாளையும் உணவு திருவிழா நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என 6 முறை பரிசு குலுக்கல் போட்டி நடத்தப்படுகிறது. இன்று வெட் கிரைண்டர், வெள்ளி நாணயங்கள், கிப்ட் ஹாம்பர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
வெளிநாட்டவர்களும் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
உணவுத் திருவிழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக இள வட்டக்கல் தூக்குதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் இளவட்டக்கல்லை தூக்கி பரிசுகளை வென்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற, டயர் இழுவைப் போட்டியில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் சுற்றில் பங்கேற்ற பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசை வென்றவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
உணவுத் திருவிழா நாளையும் (ஆகஸ்ட் 7) மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.