இந்தியாவில் மிக விரைவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகை பணிகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஓராண்டாக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு அவர்கள் பணியாற்றி வருவதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். மிக விரைவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டு வருவதாக தெரிவித்த அவர், முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என கூறினார்.







