புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தம்முடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகணியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியைக் கண்டு முதலமைச்சர் பழனிசாமி அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சசிகலா வெளியில் வந்தால் அதிமுக நான்காக உடைய வாய்ப்பிருப்பதாகக் கூறிய ப.சிதம்பரம், திமுக-காங்கிரஸ் கூட்டணி இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் முளைக்கவே முடியாது என்று கூறினார்.







