’கருப்பு’ சிறப்பு காட்சிகள் ரத்து… ரசிகர்கள் ஏமாற்றம்…!

இன்று வெளியாகும் நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா- ஆர். ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’கருப்பு’. டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

கருப்பு திரைப்படத்தின் ரீலீஸ் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக மே.14 (இன்று) ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. மேலும் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு (9 மணி) தமிழ் நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் இன்று வெளியாகும் கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தவிர்க்க முடியாத காரணங்களால், “’கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.