தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் அக். 15 ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட மாநில அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளில் பங்கேற்றனர்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று சென்னை நேரு விளையாட்டரங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டுப் பொட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.




