என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நியூஸ்7 தமிழ் வியூகம் நிகழ்ச்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனுடன் நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் நடத்திய வியூகம் நேர்காணல் நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதிலளித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். என் எல் சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடும் விவசாயிகள் இடையே பிரித்தாளும் சூழ்ச்சி செய்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரத்தில் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ஒவ்வொரு மேடையிலும் அரசியல் பேசுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக மூத்த தலைவர் நெடுமாறன் கூறியதில் அரசியல் உள்ளதாக கருதுகிறேன்.
வடமாநில தொழிலாளர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. பொருளாதார உரிமையை பறிக்கும் வகையில் வட மாநில தொழில் அதிபர்களின் ஆதிக்கம் இருப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் ஆட்சிக்கு நன்மை பயக்கும் விதத்தில் தான் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம்” என வேல்முருகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் முழுமையான நேர்காணல் இன்று இரவு 9 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
– யாழன்