தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமைப் பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

உதகைக்கு ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக வருகை புரிந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்ரவி முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமைப் பார்வையிட்டார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக…

உதகைக்கு ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக வருகை புரிந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்ரவி முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமைப் பார்வையிட்டார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக உதகைக்கு வந்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள
அவர் நீலகிரியில் உள்ள கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.


இதையும் படிக்க: மின் கம்பி உரசியதில் தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த லாரி!

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள வளர்ப்பு யானைகள்
முகாமிற்கு குடும்பத்துடன் வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அங்குள்ள வளர்ப்பு யானைகள் முகாம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். பின்னர், வனத் துறை அதிகாரிகளுடன் முதுமலை வனப் பகுதியில் எத்தனை வகையான வனவிலங்குகள் உள்ளன. முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளின் பாராமரிப்புகள் ஆகியவை குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.