பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப் பற்றி எரிந்து யில் கருகி எரிந்தது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சின்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (31). இவர் தனக்கு சொந்தமான லாரியில் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி கொண்டு எருமியாம்பட்டி அருகே வந்த போது சாலையின் அருகே இருந்த மின் கம்பியில் உரசியதில் வைக்கோல் தீப்பற்றியது. இதனை பார்த்த சசிகுமார் உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்தினார்.
ஆனால் தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது. அருகே இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் சுமார் 15 லட்சம் மதிப்பிலான லாரி மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்தன.
-அனகா காளமேகன்







