பட்டினப் பிரவேச விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் – அமைச்சர் சேகர்பாபு

‘செய்தி வர வேண்டும் என்பதற்காக சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்’ என்று நினைத்து பேசுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சரின்…

‘செய்தி வர வேண்டும் என்பதற்காக சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்’ என்று நினைத்து பேசுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவு படி இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு 112 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தோம். ஆனால், அதற்கும் கூடுதலாக பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு 165 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அறிவிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் தேவைப்படும் போதெல்லாம் புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், பட்டினப்பிரவேசம் குறித்து, அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என தெரிவித்த அவர் தொடர்ந்து, பாஜக மாநில தலைவார் அண்ணாமலை கருத்துக்கு பதிலளித்தார் அப்போது, ‘யாரும் பல்லக்கு தூக்க கூடாது, நியாயத்திற்கு தான் பல்லக்கு தூக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ – மேற்கு வங்க முதலமைச்சர், மம்தா பானர்ஜி எச்சரிக்கை’

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அண்ணா காலத்தில் இருந்தே தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றும், வாழ்த்து சொல்வது அவரவர் விருப்பம் என தெரிவித்தார். மேலும், தற்போது நடப்பது அனைத்து மதத்தினருக்குமான ஆட்சி என குறிபிட்ட அவர், ஜீயர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.