தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களான பிரவீன், பரிமலேஸ்வரன், மணிகண்டன் ஆகியோர் நேற்றிரவு துரித உணவுகம் ஒன்றில் ய சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த உணவு வகை, கெட்டுப்போன பிறகும் விற்கப்படுவதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து, தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.








