‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ – மம்தா பானர்ஜி எச்சரிக்கை

குடியுரிமை சட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸை அமித்ஷா குற்றம்சாட்டிய நிலையில், நெருப்போடு விளையாடாதீர்கள் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார்.…

குடியுரிமை சட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸை அமித்ஷா குற்றம்சாட்டிய நிலையில், நெருப்போடு விளையாடாதீர்கள் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். அங்கு சிலிகுரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் சிஏஏ குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருவதாக தெரிவித்தார். மேலும், ‘மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஊடுருவல் தொடர வேண்டும் என்றே விரும்புகிறார். ஆனால், ஊடுருவிய அகதிகளுக்கு மேற்கு வங்கத்தில் குடியுரிமை வழங்கப்பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கொரோனா அலை முடிந்தவுடன் நாங்கள் உறுதியளித்தது போல் சி.ஏ.ஏ உடனடியாக அமல்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜக 3 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 77 இடங்களை வென்றுள்ளது. சுமார் 2.28 கோடி மக்களின் வாக்குகளை பாஜக கடந்த தேர்தலில் பெற்றுள்ளது. இதன் மூலம் எங்கள் கட்சி ஒவ்வொரு கிராம மக்களிடையேயும் சென்றுள்ளது என்பது உறுதியாகிறது. மம்தா பானர்ஜி தனது அராஜகத்தையும், ஊழலையும் நிறுத்தும் வரை உண்மைக்காகவும், நியாயத்திற்காகவும் போராடுவதை பாஜக நிறுத்தாது என கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘இளையராஜா மற்றும் கங்கை அமரன் பின்னால், சங்பரிவார கும்பல் – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு’

தொடர்ந்து பேசிய அவர், மேற்கு வங்க மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக மமதாவை முதலமைச்சராக தேர்ந்தெடுள்ளார்கள். இதை மனதில் வைத்தாவது அவர் நன்றாக மக்கள் பணியாற்றுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், ஊழல், அராஜகம், பாஜக தொண்டர்களை கொலை செய்வது என எதையும் அவர் நிறுத்தவில்லை. இதனை எதிர்த்து பாஜக போராடாது என்று அவர் நினைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், அமித்ஷாவின் குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 2024-ல் பாஜக ஆட்சிக்கு வராது என்றும், குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்தார். தாம் என்ன செய்ய வேண்டும் என கற்பிக்க வேண்டாம் என எச்சரித்த மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.